கொரோனா இல்லா கோவை மாநகரை உருவாக்கும் முயற்சி : ஆர்வத்துடன் பங்கேற்கும் தன்னார்வலர்கள்..!

11 September 2020, 1:31 pm
corona testing 1-- updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான சென்னையில், தொற்று பாதிப்புகள் முன்பை விட தற்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகளே காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அப்படி, கொரோனாவுக்கு எதிராக செயல்பட்ட சென்னை மாநகராட்சியில் அங்கம் வகித்த துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், கோவை மாநகராட்சியின் ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, இடமாற்றப்பட்டார்.

இவர் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், கோவை மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை 500 கடந்தே இருந்து வருகிறது. எனவே, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோவை மாநகராட்சியிலும் அடுத்தடுத்து அமல்படுத்தி வருகிறார்.

Cbe Corporation -Updatenews360

இதன் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியனின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று, கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர்கள், தன்னார்வலர்களை ஒன்று திரட்டி, தற்காலிக கொரோனா தடுப்பு பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றை அறிந்து பணியாற்ற ஊக்குவிப்பதற்காகவும், களப்பணியாளர்களின் பொருளாதார சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகவும், அவர்களுக்கு தலா ரூ. 500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, ஏராளமான மாணவர்கள் கோவை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள்/ தன்னார்வலர்கள் +9196269 – 01753, +91 77085 – 92333 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கோவை மாநகரை கொரோனா இல்லா மாநகராக மாற்றும் நடவடிக்கையில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

Views: - 5

0

0