கோவை மாநகராட்சி தேர்தல்: மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரசுதன் விருப்ப மனு

Author: Udhayakumar Raman
1 December 2021, 8:27 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட,கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரசுதன் விருப்ப மனு வழங்கினார்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதன்படி பல்வேறு கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.இந்நிலையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் டிசம்பர் 1 ந்தேதி முதல், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.அதன்படி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் கோபாலபுரம் பகுதியில் உள்ள காமராஜ் பவனில் விருப்ப மனுவை வழங்கி வருகின்றனர்.இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி வர்த்தக அணி மாவட்ட தலைவரும்,ஹரிஹரசுதன் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தமது விருப்ப மனுவை மேலிட பார்வையாளர் விஜய இளஞ்செழியனிடம் வழங்கினார்.இதில் மாவட்ட பொருளாளர் சௌந்தர குமார், இருகூர் சுப்பிரமணியம் , தென்றல் நாகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Views: - 85

0

0