கோவையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய எம்.எல்.ஏ. கந்தசாமி..!

1 August 2020, 1:49 pm
ADMK cricket - updatenews360
Quick Share

கோவை ; கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சூலூர் எம்.எல்.ஏ. வி.கந்தசாமி பரிசு பொருட்களை வழங்கினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக முதலாம் ஆண்டு அதிவிரைவு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், சுமார் 16 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதில், வதம்பச்சேரி சுல்தான்பேட்டை ஒன்றியம் அணியும், குரும்பபாளையம் பொள்ளாச்சி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் வதம்பச்சேரி அணியை வீழ்த்தி குரும்பபாளையம் அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. இந்த தொடரில் வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சூலூர் எம்.எல்.ஏ. வி.கந்தசாமி, பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்தார்.

சிறந்த பவுலர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கீப்பர், சிறந்த நடுவர், தொடர் நாயகன், ஆட்டநாயகன் போன்ற பல விருதுகள் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய எம்.ஜிஆர். மன்ற மாநில கழக துணைச் செயலாளர் தோப்பு அசோகன், சூலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான பீடம்பள்ளி குமாரவேல், சூலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவருமான கந்தவேல், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அப்பாசாமி, மாநில விவசாய அணி துணை கழகச் செயலாளர் Ovr.ராம சந்திரன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் வினோத்குமார், மாவட்ட வக்கீல் அணியின் இணை செயலாளர் பிரபு ராம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணை செயலாளர் அருண் கிஷோர், கலங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன், கலங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் நடராஜன், சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 9

0

0