கோவையில் கொரோனா 3வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்பு: கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் பேட்டி

Author: kavin kumar
9 August 2021, 10:28 pm
Quick Share

கோவை: கோவையில் கொரோனா 3வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,”கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், கோவையில் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது எனவும்,
சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால் கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்த அவர், இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என கூறினார்.

ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்பு உண்டு என தெரிவித்த அவர், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருவது முழு ஊரடங்கை தவிர்கும், கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்த அவர், அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகள் இ.எஸ்.ஐ மரித்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை 40ம், ஐ.சி.யு படுக்கைகள் 30ம் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 202

0

0