வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயார்நிலையில் கோவை: மாவட்ட ஆட்சியர் உறுதி..!!

Author: Rajesh
11 November 2021, 5:23 pm
Quick Share

கோவை: வடகிழக்கு பருவமழையை சமாளிப்பதற்கான அனைத்து உபகரணங்களும், மீட்பு குழுவும் கோவை மாநகராட்சியில் தயார் நிலையில் வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தாரஸ் அகமது, வன்னிய பெருமாள் ஆகியோர் வாலாங்குளத்தில் ஆய்வு மேற்ககொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி சாலை ராமநாதபுரத்திலும் ஆய்வு பணிகள் நடைப்பெற்றது.

அந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நிவாரண பணிகளையும், முன்னேற்பாடுகளயும் கவனிப்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்படி சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாரேஸ் அகமது மற்றும் ஐபிஎஸ் வன்னிய பெருமாள் அவர்களும் இன்று கோயம்புத்தூரில் உள்ள குளங்கள் மற்றும் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் முன்னெச்சரிக்கை பணிகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும், நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடக்கும் மருத்துவ முகாம்களை பார்வையிட உள்ளனர். ஆரஞ்ச் அலர்ட் இருந்த போதும் தற்போது எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக முன்னேற்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

கோவை மாநகரை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயாராக உள்ளது. நொய்யல் ஆற்றுப் பகுதியில் உள்ள 23 குளங்களில் 22 குளங்கள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த குளங்களை சரியாக கண்காணித்து அடைப்புகள் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு வருகின்றது. திருச்சி ரோட்டில் 600 மீட்டர் அளவில் தண்ணீர் வெளியே வந்தது, இருந்த போதும் அன்று இரவே அது சரி செய்யப்பட்டது.

பொள்ளாச்சி ஆழியாரில் உள்ள இரண்டு சிஸ்டம் டாங்கிகளும் 60% கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், பவானிசாகர் ஆற்றில் பேக்வேர்ட்ஷ் ஏற்படுவதால் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கோவை கார்ப்பரேஷன் சார்பாக 24 மணிநேரம் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷனில் உள்ள டாங்கிகளை கண்காணிப்பதற்காக பொதுப்பணித்துறை அலுவலர்களை நியமித்துள்ளது. போக்குவரத்தை சரி படுத்துவதற்காக துணைகமிஷ்னரை நியமித்துள்ளது.

சித்திரைச்சாவடி அணைக்கட்டு, மற்றும் மத்திய அணைக்கட்டுகளான பில்லூர், ஆழியார் அணைக்கட்டுகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்க தடை விதித்துள்ளது. மேலும், கோவை குற்றாலம் பகுதிகளிலும் குளிப்பதற்கும், செல்பி எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள அதிகாரிகள் இதனை கண்காணித்துவருகின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் ஹை பவர் பம்பு செட்கள் தையார் நிலையில் உள்ளது. மேலும், இந்த வடகிழக்கு பருவமழையை சமாளிப்பதற்காக அனைத்து உபகரணங்களும் ஆட்களும் கோவை மாநகராட்சியில் தயார் நிலையில் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 206

0

0