வீடு புகுந்து மூதாட்டியை கொடூரமாக வெட்டி கொலை: விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்

13 October 2020, 10:03 pm
Quick Share

கோவை: கோவையில் மூதாட்டியை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவையில் வைசியாள் வீதி கெம்பட்டடிகாலனியை சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டி கடந்த 30ம் தேதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில் இவர் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தோகத்தின் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார்,

அவர்களிடமிருந்து 70 சவரன் தங்கநகைகள், ஆட்டோ, கார், டூவிலர் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான (A1) திலக் என்பவரை தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- கெம்பட்டி காலணி நான்காவது வீதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி லதா(எ)ராணி மளிகை சாமானங்கள் வாங்க அடிக்கடி சென்று வரும் போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தனலட்சுமி சிறு சிறு உதவிகள் செய்துள்ளார். நாளடைவில் பழக்கம் அதிகரிக்க தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பது லதாவிற்கு தெரியவந்தது.

இதனை தன்னுடைய தம்பி திலக்கிடம் கூறியுள்ளார். பட்டறை ஒன்றில் பணியாற்றி வரும் திலக் ஏற்கனவே கடன் தொல்லையில் இருந்த அவர் தனது சகோதிரி மாலா(எ)ரேவதியுடன் மற்றும் திலக்கின் நண்பர்களான செல்வம், மகேஷ்குமார், சத்தியசீலன் ஆகியோர் தனலட்சுமி வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். திலக் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒருமாத காலமாக தனலட்சுமி மற்றும் அவருடைய வீட்டை நோட்டமிட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் திலக் , செல்வம் இருவரும் தனலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனலட்சுமி திலக்கை பார்ர்தவுடன் உள்ளே அனுமதித்துள்ளார்.

அதன்பின்னர் இருவரும் திட்டமிட்டபடி விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட தனலட்சுமி ஒருசில நிமிடங்களில் தொண்டை விக்கியுள்ளது, இருவரும் கொடுத்த இனிப்பில் ஏதோ கலந்து இருப்பதாக அச்சமடைந்த அவர் சத்தமிட்டுள்ளார். இதையடுத்து இருவரும் தனலட்சுமி தலையில் அடித்து கீழே படுக்கவைத்துள்ளனர். அதன்பின்னர் வீட்டில் இருந்த 70 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனலட்சுமி தன் வீட்டில் 1 கோடி வரையிலும் பணம் இருப்பதாக லதாவிடம் கூறிய நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டிள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பணம் இல்லாத நிலையில், கிடைத்ததை கொள்ளையடித்ததை 5 பங்குகளாக பிரித்து தப்பித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் எந்த தொடர்பு இல்லதது போல லதா குடும்பத்தினர் நாடமாடியது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் 5 பேரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அக்கம்பக்கத்தினரே பணத்திற்காக கொலை வரைக்கும் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Views: - 34

0

0