ரயில்வே தனியார் மயத்தை புகுத்துவதை கண்டித்து கூட்டுப் போராட்டம்
1 February 2021, 2:31 pmவேலூர்: காட்பாடி ரயில் சந்திப்பில் இந்திய ரயில்வே தனியார் மயத்தை புகுத்துவதை கண்டித்து நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தில் 100-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் இந்திய ரயில்வே தனியார் மயமாக்க முயற்ச்சி மேற்கொள்ளபடுவதாகவும், அதை உடனடியாக நிருத்த கோரி SRMU/AIRF மற்றும் ரயில் பயணிகள், பொதுமக்கள் இனைந்து கூட்டுப் போராட்டம் நடத்தினர். SRMU மஸ்தூர் யூனியன் மாநில தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமுக ஆர்வலர் விசுவநாதன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் தனியார்மயத்தால் ஏற்ப்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
தனியார் மயமானல் அனைத்து ரயில்களிலும் பொது பிரிவு கம்பார்ட்மெண்ட் நீக்கப்படும், ரயில்வே கட்டணம் மென்மேலும் உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான சலுகைகள் மறுக்கப்படும். ரயில் பாதுகாப்பு உறுதியளிக்க முடியாது, மொத்ததில் ரயில் பயணம் பயணிக்க முடியாத பயணமாக மாறும் அபாயம் இருப்பதால் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று போராட்டத்தில் முழக்கம் எழுப்பபட்டது.
0
0