சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவித்த ஆட்சியர்…

9 August 2020, 4:56 pm
Quick Share

திருவள்ளூர்: வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவித்த குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்த அங்கவஸ்திரம் அணிவித்து மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் கவுரவபடுத்தினார்.

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 08, 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளை கவுரவிக்கும் வகையில், அப்போராட்டத்தில் பங்கேற்ற திருவள்ளுர் மாவட்டம், பாடியநல்லூர் பகுதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகி திரு.சந்தியாகு அவர்களையும்,

தியாகி திரு.கணேசன் ஆகியோர்களை மேதகு இந்திய குடியரசு தலைவர் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட அங்கவஸ்திரம் மற்றும் சால்வை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அணிவித்து, கவுரவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர்
ச.வித்யா, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.