தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பணிகளை ஆட்சியர் ஆய்வு

Author: Udhayakumar Raman
29 July 2021, 1:24 pm
Quick Share

வேலூர்: வேலூர் கீரின் சர்க்கிள் சாலை மற்றும் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கிரீன் சர்க்கிள் சாலையின் மையப்பகுதியில் பூங்கா உள்ளது. இதன் காரணமாக மேம்பாலம் அடியில் செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி திரும்ப முடியாமல் சிக்கி கொள்வதால் பல முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக சாலையின் அகலத்தை அதிகரிக்கவும், மேலும் பூங்காவில் சுற்றளவை குறைப்பது குறித்தும் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். உடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் மாநகராட்சித்துறையின் அதிகாரிகளும் இருந்தனர்.

பின்னர் சத்துவாச்சாரி பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், “பூங்காமையத்தில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை குறைக்கவுள்ளோம். மேலும் கால்வாய்கள் 4 மீட்டர் அகலத்தில் உள்ளது. சாலையின் அகலம் 6 மீட்டர் மட்டும் உள்ளது கால்வாயை 2 மீட்டர் தள்ளி அமைத்து சாலையின் அகலத்தை 8 மீட்டராக அதிகரிக்கவுள்ளோம். இப்பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என்று கூறினார்.

Views: - 384

0

0