அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

Author: Udhayakumar Raman
1 September 2021, 4:54 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தமிழகத்தில் கோரோனோ தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முறையாக அங்கன்வாடி பள்ளிகளில் இயங்கவில்லை. அங்கன்வாடியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குழந்தைகளுக்கு தேவையான அரிசி, முட்டை, பருப்பு ஆகியவற்றை மற்றவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் மதிய உணவை அங்கன்வாடியில் வந்து உட்கொள்ளலாம் எனவும், வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று செப்டம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அங்கன்வாடியில் உணவு அருந்த ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் வந்தனர். விருதுநகர் பர்மா காலனி அருகே உள்ள நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் அடிப்படை வசதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்று வழங்கியும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

Views: - 103

0

0