மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

5 April 2021, 1:24 pm
Quick Share

திருவள்ளூர்: நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குமையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை, சீல் அரக்கு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை பொன்னேரியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தனிசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொன்னையா‌ மண்டல வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு, மின்னனு வாக்குப்பதிவுக்கு இயந்திரம், அழியாத மை, அரக்கு சீல், வாக்காளர் பட்டியல் தடுப்பு அட்டை, சர்க்கர நாற்காலிகள் உள்ளிட்ட 38 வகையான வாக்குப்பதிவு நடைபெற தேவையான பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடனுக்குடன் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும்
4,902 வாக்குசாவடிகளுக்கு வாகனம் மூலம் இயந்திரங்களை தேர்தல் நடத்தும் பணியாளர்களை உடன் அனுப்பிவைக்கும் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Views: - 15

0

0