கார் மோதியதில் கல்லூரி படிக்கும் வாலிபர் உயிரிழப்பு

25 January 2021, 1:32 pm
Quick Share

மயிலடுதுறை: பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த கார் மோதியதில் கல்லூரி படிக்கும் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் தெருவை சேர்ந்த அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஷாஜகான் என்பவரின் மகன் முகமது பாசில் (21). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டய கணக்காளர் (CA) படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்று உள்ளார் தேர்வை முடித்துவிட்டு இன்று காலை கும்பகோணத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு முகமது பாசில் வந்துள்ளார்.

அப்போது குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி பகுதியில் முன் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் முகமது பாசில் பலத்த காயம் அடைந்தார். பின்பு அவரை மீட்டு அரசு பெரியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 5

0

0