கலைஞரின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி: உருவ சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்…

Author: kavin kumar
7 August 2021, 3:59 pm
Quick Share

அரியலூர்: முன்னாள் முதல்வர் கலைஞரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருவ சிலைக்கு அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அரியலூரில் உள்ள மற்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 145

0

0