இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி !!! இந்துக்களை கிளப்பி விட்டு கலவரம் செய்ய பல முயற்சி… கடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு

Author: Udhayakumar Raman
22 September 2021, 8:46 pm
Quick Share

கோவை: பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி கோவையில் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக பணியாற்றிய சி.சசிகுமார் கடந்த 2016 – ஆம் ஆண்டு செப்டம்பர் 22 – ம் தேதி பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது அதேபோல் இந்த ஆண்டும் விகே மேனன் சாலையில் புஷ்பாஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையிலும், மாவட்டத் தலைவர் தசரதன் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியதாவது:- இந்து முன்னனி வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்துக்களை கிளப்பி விட்டு கலவரம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான் போன்ற நிலைமை இங்கும் வரும். பங்களாதேச இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நாடு கடத்த வேண்டும். சட்டவிரோதமாக பல பள்ளி வாசல்கள் துவங்கப்பட்டது. அதில் தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கின்றனர்.

காவல்துறை இந்த அரசாங்கத்திற்கு பணிந்து செல்கிறது. ஆளுநர் உளவு துறை சேர்ந்தவர். ஆகவே அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் இந்து முன்னனி குறித்து சட்டசபையில் பேசவில்லை. இதே போல் இன்று காலை முதலே கோவையில் உள்ள அனைத்து இந்து முன்னணி கொடிக்கம்பங்கள் முன்பு சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது 250 க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 106

0

0