வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்

6 March 2021, 11:57 am
Quick Share

கோவை: கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் தேர்தலுக்காக 5 ஆயிரத்து 523 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 414 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,

5 ஆயிரத்து 912 விவிபேட் இயந்திரங்களும் உபயோகப்படுத்தப்பட்ட உள்ளன. தேர்தல் பணிகளில் 21 ஆயிரத்து 500 அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை சுகாராரத்துறை அலுவலகத்தில் இருந்து கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணிகள் இன்று துவங்கியுள்ளது. இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பணிகள் நடைபெற உள்ள சூழலில், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் இன்று பணிகள் துவங்கின.

Views: - 1

0

0