காட்பாடியில் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கும் பணி துவக்கம்

15 May 2021, 1:27 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் உள்ள நியாய விலைக் கடைகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிவாரண பணியை மேற்கொண்டு டோக்கன் முறையில் தினமும் 200 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்தன. அதில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் இதுவும், ஒன்று அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 2,000 ரூபாய் ரொக்கப்பணம் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நியாய விலைக் கடைகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிவாரண பணியை மேற்கொண்டு டோக்கன் முறையில் தினமும் 200 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் மாஸ்க் அணிந்தும் வாங்கிச் செல்கின்றனர். குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று 2000 ரூபாய் தொகையை பெற்று கொள்ளலாம் என காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

Views: - 41

0

0