வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

14 April 2021, 7:32 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளில் கோடைகாலங்களில் தண்ணீர் உணவுத்தேடி, கர்நாடக மாநிலம் வனப்பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்வது வழக்கம். அதே போல் இந்தாண்டும் கோடைக்கு முன்னரே கர்நாடக மாநிலத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. ஆனால் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி அலைகிறது. ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியில் கோடை காலங்களில் வனத்துறை சார்பில் வான விலங்குகள் தண்ணீர் குடிக்க தொட்டி அமைத்து தண்ணீர் விடுவார்கள்.

ஆனால் வனத்துறையினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வனப்பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றாததால், கடந்த 10 நாட்களில் ஒகேனக்கல் வனப்பகுதியில் அடுத்தடு இரண்டு யானைகள் பரிதாபமாக இறந்தது. இதனால் வனத்துறை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல் கூடுதலாக தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 20

0

0