சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…

1 August 2020, 4:10 pm
Quick Share

புதுச்சேரி: சைவ சமய இலக்கியங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி சிவனடியார் திருக்கூட்டைப்பினர் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கலாட்டா என்ற யூடிப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற பேச்சாளர் சுந்தரவள்ளி சைவ சமய இலக்கியங்களை இழிவு படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தாக தெரிகிறது. சிவனடியார் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் தொடர்ந்து இந்து மதத்தினையும், சைவ சமய இலக்கியங்களையும் இழிவு படுத்தி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 6

0

0