40 மனநோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Author: Udhayakumar Raman
29 March 2021, 8:46 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் மனநல காப்பகத்தில் தங்கி இருக்கும் 40 மனநோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 குமரி மாவட்டம் கன்னியாகுமரி அடுத்த பொத்தையடி பகுதியில் தனியார் மனநல காப்பகம் உள்ளது. காப்பகத்தின் உரிமையாளர் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது காப்பகத்தில் மருத்துவமனை அதிகாரிகள் சென்று சோதனை செய்தபோது மருத்துவமனையில் இருந்த 86 மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 40 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.

 இதைத்தொடர்ந்து அவர்கள் 40 பேரும் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல பட்டனர். மேலும் காப்பகத்தில் மீதம் இருந்த 46 மனநோயாளிகள் தனித்தனியாக வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 குமரியில் தனியார் மனநல காப்பகத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 54

0

0