இரு தரப்பினரிடையே மோதல்: இரண்டு பேர் பலத்த காயம்

1 November 2020, 2:26 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் பலத்த காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு பிரிவினர் சேர்ந்த நான்கு இளைஞர்கள் குடிபோதையில் நேற்று நள்ளிரவில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருபிரிவினரும் கம்பு மற்றும் கல்லை வைத்து அடித்து கைகலப்பு ஈடுபட்டுள்ளனர் இதில் ஒரு பிரிவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் குட்டிபாபு என்ற இருவருக்கு மண்டை உடைத்து பலத்த காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமணையில் கொண்டு சென்றுள்ளனர் உள்ளனர்

இரு பிரிவினர் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே டிஎஸ்பி நாகஷங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்சார் விக்னேஷ் பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டி நேசன், மணிகண்டன், சுரேஷ், ராம்சிங் என 6 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Views: - 19

0

0