சிறப்பாக பணிப்புரிந்த 13 காவல் துறையினருக்கு பாராட்டு

Author: Udayaraman
6 October 2020, 7:54 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணிப்புரிந்த 13 காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ் குமார் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ் குமார் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இந்த சிறப்பு பணியானது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய நபரை வான் தந்தி மூலமாக தந்த தகவலின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் அருள்வடிவழகன்,

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தருமன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோருக்கும் மற்றும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யபட்டுள்ள குட்கா லாரியை பிடிக்க உதவியாக இருந்த காவல் ஆய்வாளர் துரைராஜ்,

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் யுல்மூர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் இராமசந்திரன் மற்றும் முதல் நிலைய காவலர் சுரேஷ் ஆகியோருக்கும் மேலும் அரூர் பேருந்து நிலையத்தில் கேட்பாற்று கிடந்த கைப்பiயில் இருந்த ரூபாய் 25,000 த்தை உரியவரிடம் ஒப்படைத்த அரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயில்சாமி அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.தமிழ்மணி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Views: - 31

0

0