கடன் தொல்லை காரணமாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் தற்கொலை

Author: kavin kumar
13 October 2021, 5:56 pm
Quick Share

சென்னை: கடன் தொல்லை காரணமாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் வயது 55. இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ ,நேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயஸ்ரீ திருமணம் முடிந்து அவர் கணவரோடு வாழ்ந்து வருகிறார். ஹரிஷ் சந்த் எம்.கே.பி நகர் 3 வது மெயின் ரோடு பகுதியில் பாலாஜி ரெடிமேட் என்ற பெயரில் துணிக் கடை நடத்தி வருகிறார். ஹரிஷ் சந்த் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாகவே இவர் நடத்தி வரும் துணிக்கடை வியாபாரம் பெரிய அளவு கைகொடுக்காத நிலையில் தொடர்ந்து கடன் பிரச்சனயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய இரண்டாவது மகள் நேகாவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஹரிஷ் சந்த் மகள் திருமணத்திற்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ள அறையில் காய்கறி வெட்டும் கத்தியால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த இவரது மகன் நேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எம்.கே.பி நகர் போலீசார் ஹரிஷ் சந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 146

0

0