பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

8 July 2021, 1:56 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், கடுமையான காலகட்டத்திலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் முரளி, வார்டு தலைவர்கள் சக்தி, சம்சுதீன், பொதுச்செயலாளர்கள் கள்ளிக்குடிகுமார், சிந்தாமணி விக்டர், மற்றும் பஜார் மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 100

0

0