அனுமதியின்றி சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரஸார்: பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

12 July 2021, 4:56 pm
Quick Share

திருச்சி: அனுமதியின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டர் பாடைகட்டி சைக்கிள் பேரணியில் ஈடுபட காங்கிரஸாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியா முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியும், டீசல் விலையும் 100ஐ கடந்து வருகிறது. மேலும் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் சமூக அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்து மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில்

கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டியும், சைக்கிள் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றால் அப்பொழுது காவல்துறையினர் பேரணி செல்ல மறுப்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத் ஒட்டிய சாலை தற்பொழுது அடைக்கப்பட்ட படியால் அந்தச் சாலையில் பேரணியை துவக்கினர். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் பேரணியைத் தொடர்ந்து மெயின்கார்டுகேட் நோக்கி செல்ல முற்பட்டனர். ஆனால் ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதன்காரணமாக காவல்துறையினருக்கும்,கட்சியினருக்கும் வாய்த்தகராறு ஈடுபட்டது. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்ட சூழலில் மீண்டும் சிறிது தூரத்திற்கு அனுமதி கோரினார். காங்கிரஸார் சிறிது தூரத்திற்கு மட்டும் அனுமதி அளித்த காவல்துறையினர் அனுமதி அளித்த தூரத்தை கடந்து செல்ல முற்பட்ட பொழுது காவல்துறை அவர்களை கைது செய்தனர்.

Views: - 90

0

0