கட்டிட தொழிலாளி கொலை வழக்கு: கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது

Author: Udhayakumar Raman
23 October 2021, 3:47 pm
Quick Share

சென்னை: புழல் அருகே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் புத்தகரம் சுபாஷ் நகரில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் உடல் இருப்பதாக புழல் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவடடத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கட்டிடம் கட்டும் பணிக்காக கடந்த ஒருமாதத்திற்கு முனனர் பணிக்கு வந்தவர் என்பதும், ஆறுமுகத்தின் தாய் மாமாமன் உறவுமுறையான முருகவேலை ஆறுமுகம் குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து
முருகவேலின் தம்பி மாணிக்கத்தின் மகன் அஜீத்குமார் தனது பெரியப்பாவை தாக்கிய ஆறுமுகத்தை தனது நண்பர்களான அசோக், ராஜேஷ்குமார் மூவருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.கொலை செய்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 122

0

0