கண்டெய்னர் லாரி பின்புறம் பைக் மோதிக விபத்து : கல்லூரி மாணவர் பலி!!!

24 February 2021, 1:39 pm
Accident Dead - Updatenews360
Quick Share

சென்னை : கனரக வாகனம் , இருசக்கர வாகனத்தில் மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழவரம் அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 19). இவர் மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டபடிப்பு படிப்பதாக கூறப்படுகிறது.

கல்லூரி முடித்து வீட்டிற்கு செல்லும் போது புழல் காவல் நிலையம் அருகில் வரும் போது கண்டெய்னர் லாரி பின்பக்கம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலிசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமணையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 8

0

0