நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை இன்று அறிவிப்பு..!
31 August 2020, 10:11 amநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை டிவிட்டரில் விமர்ச்சித்த விவகாரத்தில் சிக்கிய பிரசாந்த் பூஷன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர் மூத்த வழக்கறிஞர் என்பதால் மன்னிப்பு கோரினால் அவரை விடுவிக்க முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கான அவகாசமும் பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை மன்னிப்பு கேட்காத பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாறி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த சூழலில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அறிவிக்கப்படுகிறது. பிரசாந்த் பூஷனுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0