இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

12 November 2020, 10:50 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்ட திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது இருசக்கர வாகனத்தை கானவில்லை என இரு தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை அடுத்து அரியாங்குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வெங்கடேசன் சில நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்குவதற்காக மனவேலியில் உள்ள ஒரு மெக்கானிகிடம் சென்றதாக தெரியவந்ததை அடுத்து மெக்கானிக் குறித்து போலீசார் விசாரித்த போது,

அவர் திருச்சியை சேர்ந்த புரட்சி பாபு என்றும், இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியில் குடி பெயர்ந்து மனவேலியில் மெக்கனிக் கடை வைத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையில் இருந்த புரட்சி பாபுவை போலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாம் தான் வெங்கடேசன் வாகனத்தை பழுது நீக்க வந்த போது போலி சாவி தயாரித்து இரவு வெங்கடேசன் வீட்டிற்கு சென்று வாகனத்தை திருடியதாகவும், அதே போல் சாந்தி என்பவரது வாகனத்தையும் திருடியதையும் ஒப்புகொண்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் திருடிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வெங்கடேசன் தன் இருசக்கர வாகனம் திருட்டு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது திருட்டில் ஈடுப்பட்ட புரட்சி பாபுவும் புகார் அளிக்க உடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது..

Views: - 15

0

0