மீண்டும் பணி வழங்கக் கோரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் போராட்டம்…
Author: kavin kumar20 January 2022, 4:28 pm
திருவள்ளூர் : பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எளாவூரில் உள்ள தனியார் ஸ்டீல் தொழிற்சாலை வாயில் முன்பாக அமர்ந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரில் உள்ள எலக்ட்ரோ ஸ்டீல் கேஸ்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொழிலாளர்களை மீண்டும் பணி வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், கூலி உயர்வு, ஈஎஸ்ஐ , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உணவு சமைத்துஅங்கேயே உண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 13-10-2021 அன்று சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி நான்கு ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0
0