நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் …

By: Udayaraman
31 July 2021, 3:54 pm
Quick Share

நீலகிரி : கொரோனா தொற்றின் போது உதகை நாராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உதகை நகராட்சிற்குட்பட்ட 36 வார்டுகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 650 வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 250 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு மாதம் கூட ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மேலும் இது குறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம் கேட்டால் முறையான எந்த தகவல்களும் தெரிவிக்கப்படாமல் மெத்தன போக்குடன் பதில் அளிப்பதாக தெரிவித்தனர். எதிர்வரும் திங்கட்கிழமை தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நகராட்சி அலுவல வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Views: - 51

0

0