குன்னூரில் பெய்த கனமழை: ஆற்றில் விழுந்து சேதமடைந்த இரண்டு வாகனங்கள்

6 September 2020, 7:30 pm
Quick Share

நீலகிரி: குன்னூரில் பெய்த கனமழை காரணமாக ஆற்றின் கரையோர சுவர் இடிந்து இரண்டு வாகனங்கள் ஆற்றில் விழுந்து சேதமடைந்தது‌.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து மழைப்பொழிவு காரணமாக சரிவான பகுதி மண் மழை நீரில் ஈரப்பதம் நிறைந்து ஊறி காணப்பட்டது. இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து குன்னூர் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குன்னூர் வி பி தெரு பகுதியில் ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது.

இதனால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பிக்கப் வாகனங்கள் ஆற்றில் விழுந்து சேதமடைந்தது‌. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெறும் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வாகனங்கள் விழுந்த இடத்தில் கூடினர். காவல்துறையினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Views: - 6

0

0