காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு கொரோனா: காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கம்

3 September 2020, 3:23 pm
Quick Share

தருமபுரி: பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல்நிலையம் தடை செய்யபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மற்ற காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3 காவல் உதவி ஆய்வாளர் உட்பட 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் 3 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையத்தில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள்,

காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி தெளித்தனர். அங்குள்ள மற்ற காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினர். காவல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியினர் காவல் நிலையத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

Views: - 0

0

0