திருச்சி மாவட்ட சப் கலெக்டருக்கு கொரோனா உறுதி

13 July 2021, 2:54 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்ட சப் கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி சப் கலெக்டராக பதவி வகிப்பவர் ஜோதிசர்மா. இவர் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தும் பணியிலும் வருவாய்த் துறை அலுவலக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஜோதிசர்மா கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சப் கலெக்டர் ஜோதிசர்மா தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சப்-கலெக்டருக்கு கொரேனா பாதிப்பு உறுதியான சம்பவம் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 90

0

0