ஊரடங்கு விதியை மீறி செயல்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் 4 மீது வழக்குப்பதிவு

16 August 2020, 4:16 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு விதியை மீறி செயல்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் 4 மீது நகராட்சி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 75 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுகிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறி தொடர்ந்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.

இன்று சட்ட விரோதமாக செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம் மற்றும் நகராட்சி சார்பாக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகளின் உரிமையாளர்கள் 4 பேர் மீது நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 75 கிலோ மீன்களை பறிமுதல் செய்தும் சட்ட விரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு ஆயிரம் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனார்.

Views: - 36

0

0