பொது இடங்களுக்கு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

9 July 2021, 6:56 pm
Quick Share

நீலகிரி: பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மூன்று நபர்களுடன் வந்தவர்களுக்கும், உதகை நகரில் வருவாய் துறை மற்றும் போக்குவரத்து துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் ஆகியோர் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 3 நபர்களுடன் வந்தவர்களுக்கும், கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் சுமார் 50 நபர்களுக்கு மேல் இன்று சேரிங்கிராஸ் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல் உதகை ATC, மத்திய பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சிலர் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

Views: - 39

0

0