37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் 53 நபர்களுக்கு கொரோனா
1 December 2020, 1:33 pmQuick Share
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 53 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தையடுத்து கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியது.
புதுச்சேரியில் 23 நபர்களுக்கும், காரைக்காலில் 9 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 10 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 439 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 35970 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 37, 020 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.
Views: - 0
0
0