புதுச்சேரியில் மேலும் 189 பேருக்கு கொரோனா

By: Udayaraman
12 October 2020, 6:30 pm
corona positive -updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,737-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 155 நபர்களுக்கும், காரைக்காலில் 14 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 16 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4617 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 26555 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 2 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 565 ஆக உயர்ந்துள்ளது.தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 31,737ஆக உயர்ந்துள்ளது.

Views: - 28

0

0