கோவையில் 587 பேருக்கு கொரோனா : 459 பேர் டிஸ்ஜார்ஜ்

28 September 2020, 10:15 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று, மேலும் 587 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானதை தொடர்ந்து கோவையில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 424 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கோவையில் 25 ஆயிரத்து 374 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 117பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0