தனியார் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை!

Author: kavin kumar
29 September 2021, 6:32 pm
Quick Share

திருப்பூர்: மூலனூர் அருகிலுள்ள கன்னிவாடி பாரதி வித்யாலயா பள்ளியில் படித்து வரும் 3 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய மாணவிகள் இருவருக்கும் அதே பள்ளியை சேர்ந்த 12,ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது உடைய மாணவி ஒருவருக்கும் என மூன்று பேர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தால் அவர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பபட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மாணவிகள் 3 பேர்களுக்கும் நோய்தொற்று உறுதிசெய்யபட்டது.மாணவியை தொடர்ந்து 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதைத்தொடர்ந்து பாரதி வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மூன்று மாணவிகளும் அரசு கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவியுடன் ஒரே வகுப்பறையில் படித்த மாணவிகள் 5 பேரும் பள்ளிக்கு வாரமல் விடுப்பில் உள்ளனர். எனவே அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி முழுவதும் சுகாதார துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மாணவிகளின் ஊர்களான திருப்பூர் மாவட்டம் பொன்னுத்துரை அவிஞ்சிபுரம், மற்றும் காளிபாளையம் திண்டுக்கல் மாவட்டம் கல்லாங்கட்டு வலசு ஆகிய கிராமங்களில் சுகாதாரத்துறையினர் மருத்துவ குழுவினருடன் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 640

0

0