புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 3 பேருக்கு கொரோனா உறுதி

Author: Udhayakumar Raman
7 September 2021, 11:22 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கரையாம்புத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் தொற்று ஏற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளிகள் தொடங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 231

0

0