புதுச்சேரியில் 126 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

6 November 2020, 3:12 pm
Cbe Corona- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 126 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து மாநிலத்தில் இதுவரை 35675 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

புதுச்சேரியில் 85 நபர்களுக்கும், காரைக்காலில் 13, ஏனாமில் 1 நபருக்கும் மாஹேவில் 27 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1640 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 33437 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 598ஆக உள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35675ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதார துறை தகவல்.

Views: - 14

0

0