புதுச்சேரியில் 144 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

26 October 2020, 8:58 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34336 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 127 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 5 நபர்களுக்கும் மாஹேவில் 10 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3758 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 29990 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழகாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 588 ஆகவே உள்ளது.தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34336 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 11

0

0