புதுச்சேரியில் 69 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

19 November 2020, 3:10 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 69 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 36,533 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 32 நபர்களுக்கும், காரைக்காலில் 11 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 24 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 670 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 35254 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 1 நபர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 609 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 36533 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 0

0

0