தஞ்சையில் கொரோனா தீவிரம்: மேலும் ஒரு பள்ளியில் 3 பேருக்கு தொற்று உறுதி..!!

Author: Aarthi Sivakumar
18 March 2021, 12:40 pm
schools_coronavirus_updatenews360
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியை உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 800க்கும் கீழ் குறையத் தொடங்கியது.மேலும் படிப்படியாக குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதேபோல் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் 2 ஆசிரியைகள், ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஆலந்தூர் பள்ளியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சையில் கடந்த 8ம் தேதி மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 68

0

0