கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமை அமைச்சர் ஆய்வு: சிகிச்சை குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

15 May 2021, 8:28 pm
Quick Share

திருச்சி: திருச்சி என்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி வளாகத்தில் சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அங்கு நோயளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை, படுக்கைகள் வசதிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது துவாக்குடி நகரமன்ற அலுவலர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன்
சுகாதார துறை மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 39

0

0