ஒரே நாளில் 481 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

12 August 2020, 9:51 pm
corona virus new - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 481 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 481நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 2,616 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,669 சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 6381ஆகவும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் அதிகப்படியாக 286நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 481நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.