கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு…

Author: kavin kumar
10 January 2022, 5:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எத்தனை சதவீதம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர், கொரோனா தடுப்ப மையங்கள் எத்தனை உள்ளது, கொரோனா தொற்றை கட்டுபடுத்த எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், முதல்வர் உத்தரவில் பேரில் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கோவிட் தொற்றுக்காக 10 மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஆக்ஸிஜன் வசதி உள்ள 464 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதி இல்லாத 2,556 படுக்கைகளும் என மொத்தம் 3020 படுக்கை வசதிகள் தாயார் நிலையில் உள்ளது என கூறிய அவர், தருமபுரி மாவட்டத்தில் 76 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 29,161 கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 28, 733 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய அவர், மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதோடு மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் மரு.வைத்திநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.மலர்விழி வள்ளல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 193

0

0