ஈரோட்டில் பயணத்தை தொடக்கிய கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம்…

13 August 2020, 9:54 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.மேலும் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக , கொரோனா நோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் தெற்கு காவல் நிலையத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பார்வையிட்டு, கொடி அசைத்து தொடங்கி வைத்தார் ‌. பிரச்சார வாகனமானது மாவட்டத்தின் முக்கிய சந்திப்பு, பிரதான சாலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார் , நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 5

0

0