சந்தேக வகுப்பில் கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா

Author: Udayaraman
12 October 2020, 10:04 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சந்தேக வகுப்பில் கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறை மூடப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 8ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேக பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனிடையே புதுச்சேரி, காராமணி குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை சந்தேக பாட வகுப்புக்கு வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வார இறுதி நாள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமையான இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர் இருந்து வகுப்புகள் மட்டும் மூடப்பட்டன.

மேலும் மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் மூடப்பட்ட வகுப்பு முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று வழக்கம் போல 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சந்தேக வகுப்புகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 41

0

0