அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா: பள்ளி நிர்வாகம் தகவல்….

Author: Udhayakumar Raman
4 September 2021, 2:27 pm
Quick Share

அரியலூர்: ராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 01 ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கபட்டு செயல்பட்டு வரும் சூழ்நிலையில் அரியலூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் தவுத்தாய்குளம் கிராமத்தை மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அதே பள்ளியில் 450 மாணவிகள் மற்றும் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு படிக்கும் ராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த வகுப்பறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யபட்டு மூடபட்டுள்ளது. மேலும் அந்த மாணவியை சுகாதார துறை சார்பில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கபட்டது.

Views: - 121

0

0